திருமண வாழ்த்துக் கவிதை

எங்கோ பிறந்து

இரு வேறாய் துடித்த இதயங்கள் ,

அழகான பந்தத்தில்

இணைந்த

அற்புத தருணம் ,

இரு மனங்கள்

இணைந்த அந்த

திருநாளுக்காக

உங்களை வாழ்த்த

எப்போதும் காத்திருக்கும்

என் இதயம் ,,

இதுவரை

ஒன்றாய் கழிந்த

மகிழ்ச்சியான

வாழ்க்கை பதிவுகள்

இனிமையுடன் மீண்டும் தொடர ,

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு

தித்திப்பாய் நகரும்

உங்கள் வாழ்க்கைப்  பயணம்

அப்படியே தொடரவும் ,

அன்னியமாய் ஒருபோதும் எண்ணாமல்

"என்னவள்"

"என்னவர்"

என்று எண்ணியே

வாழும் உங்கள் பந்தம்

இன்னும் நூறு ஆண்டுகள் தொடரவும் ,

இனி வரும் அத்தியாயங்களிலும்

வசந்தமே நிறைந்திருக்க

உள்ளூர பிரார்த்தனை செய்து,

என்றும் வாடாத

இந்த வார்த்தைகள்

கோர்த்து

மனமார வாழ்த்துகிறேன்  !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.