Showing posts with label friendship. Show all posts
Showing posts with label friendship. Show all posts

அன்னை முகம்

அக்கறை அரவணைப்பு
நிறைந்த
உன் சிநேகத்தில்
இதுவரை 
நான் காணாத
அன்னை முகம்
காண்கிறேன் !!!

பிரியமான தோழி



தொட்டு கொள்ள முடியா தூரங்களிலும்
இனிதாய் பூத்த ஒரு உறவு ..
என் கண்களில் பூக்கும்
உப்பு நீரும் கூட
உன் உறவை என் உயிர் என்றே சொல்லும்..!!
சுவாசிக்க மறந்தாலும்
முழுதும் நேசித்த உன்னை
மறக்க நினைத்த நொடி நேரங்கள்
எனது கடிகாரத்தில் என்றும் இருந்ததில்லை ..
என் இதயத்தின் ஓரம்
எப்போதும் நான் ஒளித்து வைக்கும்
உன் குறும்பு வார்த்தைகள் தான்
என் துணையாக! எனக்கு தோழியாக!..
ஒற்றை வார்த்தை கூட பேசி போனாலும்
என் உள்ளத்திற்கு அது இதிகாசம் தானடி
இப்போது அதுவும் இல்லாமல்
என் நேரங்கள் எல்லாம்
யுகம் யுகமாய் கழியக்காண்கிறேன் ..
எங்கோ இருக்கிறாய்
என்று நினைப்பதற்கு
நீ யாரோ இல்லை ..
என் ஜீவனில் ஒன்றாய் கலந்த
என்றும் அணையா
நட்பின் தீபம் ..
என் இதயத்தின் சிரிப்பிற்கான வாசல்
உன் இதழ்கள் மட்டுமே ..
நீ உதிர்த்து போகும்
குறும்பு பேச்சில்
என் எல்லா தனிமை நேரங்களும்
மாய்ந்தே விடும்..!!
எல்லோரும் உறங்கிவிடும்
இரவு நேரம்
எனக்குள் எப்போதும் விழித்து கொண்டிருப்பது
உன் நினைவுகள் மட்டுமே ..
சட்டென்று மறைந்து போக
நீ ஒன்றும் வெறுமனே
வந்த உறவில்லை ..
எனக்கான உறவாக
என்னுளே பதிந்து போன
பிரியம் நீ .
உன் நட்புகாலத்தின்
என்னை இதமாய் நனைத்த
சின்னஞ்சிறு அன்பு சிதறல்கள்
இன்று பிரிக்க முடியா பாதரசம் போலே!!!
தூரத்தில் உன் இதயம்
துடித்துக்கொண்டு இருந்தாலும்
எப்போதும் எனக்கு அருகிலே சுற்றும்
உன் நினைவுகளை தீண்டி கொண்டாவது
என் ஆயுள் கழிப்பேனடி...
சிறிதாய் உந்தன்
ஒரு புன்னகை போதும் என் இனிய தோழி
விழி மூடும் தூங்கும் போதிலும்
என் உள்ளே இனித்துகொண்டிருகும்
உன் அந்த புன்சிரிப்பு ..
ஒவ்வொரு முறை
நீ பேசாத தருணங்களால்
எனக்குள்ளே வெடிக்கும்
எல்லா கோபங்களும் தோழி
உன் ஒற்றை வார்த்தையில்
காணாமலே போகும்
எங்கென்று தெரியாமல்..!!
அன்பாய் நீ அழைத்து விட்டால்
எங்கோ தூரமாய் திரிந்த வசந்தம்
என்னுளே குடிவர காண்கிறேன் ...
உருவான நாள் முதலே
எனக்குள்ளே கலந்திருக்கும்
என் உயிர் இன்று
முழு உறவாகி
நீயாக நிற்க கண்டேனடி
என் செல்லமான தோழி ..
உனது பவித்ரமான சிநேகத்தில்
நான் கொள்ளை அடித்த
உன் அன்பு என்றும்
என் உள்ளங்கை ரேகை போலே
என்றும் அழியாமல்
என் இதயத்தின் ஓரம் இருக்கும்..
உன் அன்பெனும் மழையில்
என் நெஞ்சில் பூத்த
இந்த நட்பெனும் உறவில்
என் எல்லாவற்றையும் காண்கிறேன் ..
சிறிதாய் நீ விலகி செல்கையில்
இதயம் கணமாக
உள்ளுணர்கிறேன்.

உன் மௌனத்தில் குலைந்து போகும்
என் உள்ளம் மீண்டும் சிரிப்பது
உன் குறுஞ்செய்தி அழைப்பில் மட்டுமே ..
சின்னதாய் என் கைபேசி
ஒலித்து துடித்தால்
நீயே அழைக்க வேண்டும் என்று
அவசர பிரார்த்தனை செய்ய
எப்போதும்
மறப்பதில்லை என் நெஞ்சம் ..
என் முள் பாதை எங்கும்
மலர்கள் தூவி
வெண்ணிலவு ஒளியாய்
இருட்டில் வழிகாட்டும்
உன் உறவு ,
என்றும் எனக்கு உயிரே....

தோள் கொடுக்கும் நட்பு

 Kavithaigal, Kathal Kavithaigal, Kavithaigal in Tamil Language, facebook status in tamil


நட்பு
தேர்வுக் கட்டணத்தால்
கேள்விக்குறியான படிப்பு !!
தோள் கொடுத்து உதவிய நட்பால்
தேர்வறையில் நான் !!

என் தோழி


என் இதயத்தில் 
இரண்டற கலந்த 
என் தோழி ,
உன்னை நினைக்காத
விடியல்கள்
என் வாழ்வில் 

இல்லை !!!

சிநேகம்

சந்திக்க முடியா
தூரத்தில்
நீ இருந்தாலும்
என் சிந்தைனைகள் முழுவதிலும்
உன் அக்கறை நிறைந்த சிநேகம்
மட்டுமே !!!

நட்பு

இருளுக்கு விளக்கு
எனக்கோ
என் நண்பன் !!!
வளரட்டும்  நட்பு

என் நட்பு

உன் இதயத்தை 
இறுகப் பற்றிய
என் நட்பு
உன் மௌனத்தின் பின்
ஒளிந்து கொள்ளும்
சொல்லா சோகங்களையும்
தேடி விடும்!!!

Popular Posts

Powered by Blogger.