Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

உன் தடங்களும் என் தனிமையும் !!


பிரித்துப் போட்ட 
சண்டையில் 
மிஞ்சி இருப்பது 
உன் தடங்களும் 
என் தனிமையும் 
மட்டுமே !!!

என் முதல் கவிதை



நான் எழுதிய முதல் கவிதை
படிக்க ஆசையா ?
நீயே கூட எழுதிப் படித்துக் கொள்ளலாம்
உனது பெயர் தான் !!!

உன்னைப் பற்றி எழுதாமல்



உன்னைப் பற்றி எழுதாமல்
வேறு யாரைப் பற்றி எழுதச் சொல்கிறாய் ,
அழகைப் பார்த்தால் மட்டுமே
எனக்கு கவிதை எழுதத் தோன்றும் !!

கோபத்தைக் குறைத்துக் கொள்


உன்னை தேவதை என்று
சொல்லிக் கொள்ளத்தான் விரும்புகிறேன்
கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்
தேவதைகள் கோபப்படுவதில்லை !!

கோபம் தான்


நீ தூங்கும் அழகை
ரசிப்பதை விட
சில மணி நேரங்கள்
உன்னை பிரித்து விடும்
இந்த தூக்கத்தை திட்டிக் கொண்டே
என் இரவு கழிகிறது ...

எனது தலையணை உள்ளே


உறக்கமில்லாமல்
என்னை தவிக்க வைப்பது
எனது தலையணை உள்ளே
நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் மட்டுமே!!!

திகட்டாத தித்திப்பாய்

 சர்க்கரை இனிப்பாய்
நித்தம் விடியல்
திகட்டாத தித்திப்பாய்
கூடி கழியும் நேரங்கள்
அவ்வப்போது
பாகற்காய் கசப்பாய்
உன் பிரிவு ,
மொத்தத்தில்
என் காதல் பசியாற்றும்
உன் வர்ணனை கவிதைகள் !!!!

உன் கொலுசு ஒலியை



வீதியோரம் உன் கொலுசு ஒலியை
கேட்டதும்
விழித்து கொண்டன என் விழிகள்
திறந்து கொண்டன
என் வீட்டு கதவுகள்...

என் நித்திரை நேரம்


இரவு தூக்கத்தில்
உன் நினைவுகளின் ஆதிக்கத்தில்
என்
நித்திரை நேரம்
நசுங்கி போகிறது..

ஆசை மடல்



ஆசை  வார்த்தைகளில் மடல் வரையக்
கேட்கிறாய்
உலகில்
காகிதங்கள்  காலியாகி விட்டால்
நான் பொறுப்பல்ல ,




எனது ஆனந்தத்தின்
ஒட்டு மொத்த அர்த்த்தமாய் இருக்கிறாய்..!!
அழகே  உன்னை வர்ணித்து
கவிதைகள் கோடி வந்தாலும்..
என் காதல் சொல்ல மட்டும்
ஏனோ  வார்த்தைகள் இல்லை!!!!




Click For More

உன் பாதங்களில்


கதறி அழும் ஓசை கேட்கிறதா..??
யார் என்று யோசிக்காதே ..
நீ தொட்டுப் பின் பறிக்காமல்
விட்டுப் போன ரோஜாப் பூ ஒன்றின்
கண்ணீர் தான்..
உன் பாதங்களில் தெறித்துக் கிடக்கின்றது






Kathal Kavithaigal
Click For More

நேசித்த இதயங்களிலே


நேசித்த இதயங்களிலே 
நான் சுவாசித்த இதயம் நீ..
சந்தித்த உள்ளங்களிலே
என்னை
அதிகம் சிந்திக்க வைத்தவள் நீ..!!

அறியா மூடனாய்



கவிதைகள் வாசிக்க
இதழ் திறக்கும்  நீ
பேசுவதற்கு தயக்கம்
காட்டுவது ஏனென்று
அறியா மூடனாய் நான் !!!!

சஹாரா



ஒரு முறை சிரித்து விடு
பூத்து குலுங்கட்டும்...
சஹாரா

உன்னை ரசிக்கும்


Tamil Kavithaigal, Kathal Kavithaigal, Kavithaigal in Tamil Language

வெட்கத்தில் நீ
திரும்பிக் கொண்டாலும்
திகட்டாமல்
உன்னை ரசிக்கும்
என் விழிகள் !!!

மறக்க நினைத்தாலும்


வார்த்தைகளே இல்லாத
மொழியாய் "என் கண்ணீர்"
மறக்க நினைக்கும்
ஒவ்வொரு  நொடியும்
உன்னை மீட்டெடுக்கும்
நீ பேசிப் போன
அடையாளங்கள் !!!

அழிக்க இயலா சுவடாய்


என்னைக் கவிஞன் 
ஆக்கிய
உன் முதல் சந்திப்பு
அழிக்க இயலா
சுவடாய் 

என் நெஞ்சில் !!!

தூரிகை இல்லாமல் ஓர் ஓவியம்



துளித் துளியாய்
சிதறும்
உனது பார்வையின்
தீண்டலில்
என் மனதில்
தூரிகை இல்லாமல்
 ஓர்  ஓவியம்

வெண்ணிலவை

வெண்ணிலவை தொலைத்து விட்டு
அவள் வீட்டு வாசலில்
கூட்டம் போடும்
விண்மீன்கள் ....!!!

Popular Posts

Powered by Blogger.