Showing posts with label general. Show all posts
Showing posts with label general. Show all posts

என் உயிரின் பாதி


கருவாய் சுமந்த
என் உயிரின் பாதி
கதறி  கொண்டே
முழு உருவாய்
உன் ஜனனம் !!
என்னை  தாய்மை
ஆக்கிய தருணம் !!!
என்றும் மறவேன் !!

வெண்ணிலா

வெண்ணிலா

 வானத்திற்கு
 ஓர் வெள்ளை
திருஷ்டி பொட்டு

வறுமை

நைந்திருக்கும் சேலையில்
மானத்தை பறிக்கும்
வறுமை !!!

முயற்சி

நகர்த்த முடியாவிட்டாலும்
முதலிலே விடாமல் 
முடிந்தவரை போராடும்
எறும்பு

காத்திருப்பு.

காத்திருப்பு..

கடிகாரத்தின் நேரங்களை
மெதுவாக நகர்த்தும்
கசப்பான எதிர்பார்ப்பு ..

அம்மா

முதல் முத்தம் ..

என் உயிரின்
மொத்தமும்
பரவசத்தில் மிதக்க
பட்டும் படாமல்
உன் பிஞ்சு நெற்றியை
என் இதழ்களால்
நனைத்த தருணம்
பெருமை கொண்டேன்

பெண்ணாக பிறந்ததில் ..

~அம்மா

Popular Posts

Powered by Blogger.