வீட்டுப்பாடம்


வீட்டுப்பாடம்

சீரியல் பார்க்கும்
அம்மாவின் அவசர  கண்டிப்பில்
பிள்ளையின் விளையாட்டு ஆர்வத்தில்
அவசர அவசரமாய்
முடிகிறது
தப்பும் தவறுமாயும் !!

உன் தடங்களும் என் தனிமையும் !!


பிரித்துப் போட்ட 
சண்டையில் 
மிஞ்சி இருப்பது 
உன் தடங்களும் 
என் தனிமையும் 
மட்டுமே !!!

அன்னை முகம்

அக்கறை அரவணைப்பு
நிறைந்த
உன் சிநேகத்தில்
இதுவரை 
நான் காணாத
அன்னை முகம்
காண்கிறேன் !!!

என் முதல் கவிதை



நான் எழுதிய முதல் கவிதை
படிக்க ஆசையா ?
நீயே கூட எழுதிப் படித்துக் கொள்ளலாம்
உனது பெயர் தான் !!!

உன்னைப் பற்றி எழுதாமல்



உன்னைப் பற்றி எழுதாமல்
வேறு யாரைப் பற்றி எழுதச் சொல்கிறாய் ,
அழகைப் பார்த்தால் மட்டுமே
எனக்கு கவிதை எழுதத் தோன்றும் !!

Popular Posts

Powered by Blogger.